முதலமைச்சரின் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்!
டெல்லி முதலமைச்சர் அதிஷியின் வீட்டுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த நிலையில், அரசு பங்களாவில் இருந்து வெளியேறினார். புதிய முதலமைச்சராக அதிஷி பொறுப்பேற்ற பிறகு, அரசு பங்களாவில் குடியேற இருந்த நிலையில் திடீரென சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டுக்கு சீல் வைத்ததில் துணை நிலை ஆளுநரின் தலையீடு இருப்பதாகவும், பாஜக அழுத்தத்திற்கு பணிந்து, டெல்லி துணை நிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் தனது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வந்த உடனே
அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

