தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதியதில் 10 பேர் உயிரிழப்பு
Jan 22, 2025, 18:35 IST1737551131582

மகாராஷ்ட்ராவில் தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதியதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ராவின் ஜால்கானில் தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி நின்றிருந்தவர்கள் மீது கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். புஷ்பக் ரயிலின் அவசர கால சங்கிலியை பிடித்து சிலர் இழுத்ததால் நடுவில் ரயில் நின்றது. அப்படி நின்ற ரயிலில் இருந்து இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் பயணிகள் சிலர் நின்றிருந்தனர். பயணிகள் நின்றிருந்த தண்டவாளத்தில் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 40ேர் படுகாயமடைந்தனர்.
விபத்தை அடுத்து மீட்பு பணிகளை ரயில்வே அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.