திருமணம் என்ற பெயரில் ரூ. 9.35 கோடி பணம் , நகை பெற்து மோசடி - பிரபல நடிகை மீது வழக்கு
திருமணம் என்ற பெயரில் ரூ. 9.35 கோடி பணம் , நகை பெற்து மோசடி செய்ததாக நடிகை ஆஷு ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத், ஷாக்ஸ்பேட்டைச் சேர்ந்த யேனுமுலா சத்யநாராயணா என்பவர், தனது மகனைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து நடிகை ஆஷு ஏமாற்றியதாகவும், மேலும் ரூ.9.35 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வாகனங்களைத் அவரது பெயரில் பதிவு செய்து கொண்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நடிகை அஷு ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்து தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தனது அனுமதியின்றி தன்னைப்பற்றி செய்திகள் எழுதப்பட்டாலோ அல்லது தவறான பிரச்சாரம் பரப்பப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அவர் எச்சரித்து பதிவு செய்துள்ளார்.

