பணத்தை செலவழித்து அரசுகளை அமைக்க முடியாது, பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்டிய கர்நாடக மக்கள்.. அசோக் கெலாட்

 
கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

நன்கொடை மற்றும் பணத்தை செலவழித்து அரசுகளை அமைக்க முடியாது என்று பா.ஜ.க.வுக்கு கர்நாடக மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.

ராஜஸ்தானில் முதல் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், ராஜஸ்தான் காங்கிரஸில் நிலவும் பிரச்சினைகளை சரி செய்ய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. அடுத்த சில நாட்களில் ராஜஸ்தான் காங்கிரஸ் விவகாரம் தொடர்பாக டெல்லியில் கட்சி தலைமை கூட்டம் நடத்த உள்ளது.

காங்கிரஸ்

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர்  அசோக் கெலாட் பதிலளிக்கையில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ஒரு முடிவு எடுத்தவுடன், அதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். பின்னர் நாங்கள் பணிக்கு திரும்புவோம். நடக்கும் விவாதத்தில் கர்நாடகாவின் அனுபவம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதற்கான விவாதங்களும் நடைபெறும். அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு முன்னேறுவோம். நன்கொடை மற்றும் பணத்தை செலவழித்து அரசுகள் அமைவதில்லை என்று பா.ஜ.க.வுக்கு கர்நாடக மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.

பா.ஜ.க.

கர்நாடகம் காட்டிய பாதை, இந்த பாதையை நாட்டின் ஒவ்வொரு மாநில மக்களும் காட்டுவார்கள். ராஜஸ்தான் மாநில அரசின் பணவீக்க நிவாரண முகாம் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது, மக்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. பணவீக்கத்தில் இருந்து மக்கள் நிவாரணம் பெறும் வகையில் இந்த பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.