நாகாலாந்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு.. சரத் பவாரை கடுமையாக தாக்கிய அசாதுதீன் ஓவைசி

 
லடாக்கில் 20 வீரர்கள் எப்படி இறந்தார்கள்? அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது.. அசாதுதீன்

நாகாலாந்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்ததை குறிப்பிட்டு, தனது அமைச்சர் நவாப் மாலிக்கை சிறையில் அடைத்தவர்களுக்கு சரத் பவார் ஆதரவளிக்கிறார் என்று அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்தார்.

அண்மையில் நடந்த முடிந்த நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 37 இடங்களில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜ.க. கூட்டணி  வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், என்.டி.பி.பி.-பா.ஜ.க. கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி மற்றும் நாகா மக்கள் முன்னணி உள்பட பிற கட்சிகளும் ஆதரவளித்து கடிதம் சமர்பித்தன. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு நாகாலாந்து முதல்வராக நேபியூ ரியோ பதவியேற்றார்.

பா.ஜ.க.

என்.டி.பி.பி.-பா.ஜ.க. கூட்டணிக்கு  ஆதரவு அளித்தது தொடர்பாக நாகாலாந்தின் தேசியவாத காங்கிரஸின் தலைவர் நரேந்திர வர்மன் கூறுகையில், நாகாலாந்தின் பெரிய நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவு கடிதத்தை நேபியூ ரியோவிடம் கொடுத்தன. எனவே எங்கள் 7 எம்.எல்.ஏ.க்கள் தனிமைப்படுத்த முடியாது. மற்ற அரசியல் கட்சிகளுடன் செல்ல வேண்டும் என்ற திட்டத்திற்கு கட்சியின் மேலிடம் மற்றும் கட்சியின் தலைவர் சரத் பவார் ஒப்புதல் அளித்தார் என தெரிவித்தார்.

சரத் பவார்

நாகாலாந்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறுகையில், சரத் இனி சதாப் என்றால் அவர் பா.ஜ.க.வின் பி டீம் என்று அழைக்கப்படுவார். மதச்சார்ப்பற்றவர்களுக்கு தீண்டத்தகாதவராக இருப்பார். நான் ஒரு போதும் பா.ஜ.க. அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை மற்றும் ஒரு போதும் மாட்டேன். ஆனால் 2வது முறையாக பா.ஜ.க.வை தேசியவாத காங்கிரஸ் ஆதரித்துள்ளது மற்றும் இது கடைசியாக இருக்காது. தனது அமைச்சர் நவாப் மாலிக்கை சிறையில் அடைத்தவர்களுக்கு சாஹிப் (சரத் பவார்) ஆதரவளிக்கிறார் என தெரிவித்தார்.