பிர்லா என்றால் எங்களுக்கு ஓகே.. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்போம் - அசாதுதீன் ஓவைசி

 
கடைசி நொடி வரை திட்டமிடாத, அரசியலமைப்புக்கு விரோதமான லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது….. மத்திய அரசு மீது அசாதுதீன் ஓவைசி தாக்கு

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தால், நாங்கள் ( ஏ.ஐ.எம்.ஐ.எம்.) திறப்பு விழாவில் பங்கேற்போம் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம்  தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா (யு.பி.டி.), திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற  கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக  அறிவித்துள்ளன. இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தால் நாங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்வோம் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

ஹைதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நீங்கள் கலந்து கொள்வீர்களாக என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அசாதுதீன் ஓவைசி பதிலளிக்கையில் கூறியதாவது: புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை. அதை யாரும் மறுக்க முடியாது. அதனை பிரதமர் மோடி திறப்பதை மட்டுமே எதிர்க்கிறோம். எதிர்க்கட்சிகள் என்ன தொடர்பு கொள்ளவில்லை. 

ஓம் பிர்லா

ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்று அவர்கள் (காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்) கூறுவது அரசியலமைப்பின் படி தவறானது. சபாநாயகர் மக்களவையின் பாதுகாவலர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சபாநாயகர் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் மோடி பின்வாங்க வேண்டும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைக்க வேண்டும். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தால், நாங்கள் ( ஏ.ஐ.எம்.ஐ.எம்.) விழாவில் பங்கேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.