அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனு நிராகரிப்பு!

 
ArvindKejriwal speaking with Aam Aadmi Party members

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். பின்னர்,  மே 10ஆம் தேதி பிணையில் வெளிவந்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் மருத்துவ காரணங்களால் ஜாமின் நீட்டிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.  

aravind

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  கீழமை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும்படி கூறி உச்சநீதிமன்ற பதிவாளர் ஜாமின் நீட்டிப்பு மனுவை நிராகரித்தார்.  இடைக்கால ஜாமின் முடிந்து வரும் 2-ம் தேதி சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் உடல்நிலையை கருத்தில் கொண்டு மேலும் 7 நாட்கள் ஜூன் 9 வரை ஜாமின் கோரியிருந்தார்.