மீண்டும் சிறைக்கு செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

 
arvind

இடைக்கால ஜாமின் முடிந்த நிலையில் மீண்டும் சிறைக்கு சென்றார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.


மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். பின்னர்,  மே 10ஆம் தேதி பிணையில் வெளிவந்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் மருத்துவ காரணங்களால் ஜாமின் நீட்டிப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.  இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் நீட்டிப்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சருக்கு 21 நாட்கள் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் நிறைவடைந்தது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் சிறையில் சரணடைந்தார். திகார் சிறைக்கு செல்லும் முன் ராஜ்காட் சென்று காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு மத்தியில் உரையாற்றிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “நான் மோசடி செய்ததற்காக சிறையில் அடைக்கப்படவில்லை, சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். நேற்றைய தினம் வெளியான தேர்தல் முடிவு கருத்துக்கணிப்புகள் அனைத்தும் போலியானவை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாஜகவினர் மாற்ற முயற்சிக்கிறார்கள். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடியே தனது பிரச்சாரத்தில் ஒப்புக்கொண்டார்.” என்றார்.