எதிர்க்கட்சி தலைவர்கள் கைதுக்கு எதிராக பிரதமர் கடிதம் எழுதிய பினராயி விஜயன்.. நன்றி சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்

 
தந்தை பெரியார் பிறந்தநாள்; தமிழில் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவு!

நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்களை சட்டவிரோதமாக கைது செய்தறதற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி  தெரிவித்தார்.

பா.ஜ.க. அல்லாத தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குறிப்பிட்டு பினராயி விஜயன் எழுதி இருந்தார். பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்,  மணிஷ் சிசோடியா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி, விசாரணை முகமைகளின் சம்மன்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் முன் ஆஜராகி வருகிறார். விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதைக் தடுக்க கைது கட்டாயமாக இருந்தாலன்றி, அதை தவிர்ப்பதே விரும்பத்தக்க செயலாக இருக்கும். 

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

பொது களத்தில் வெளிவரும் தகவல்களின்படி, சிசோடியாவின் விஷயத்தில் பணம் பறிமுதல் போன்ற குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. சட்டம் அதன் போக்கில் செல்ல வேண்டும் என்றாலும், அரசியல் காரணங்களுக்காக சிசோடியா குறிவைக்கப்படுகிறார் என்ற பரவலான கருத்து அகற்றப்பட வேண்டியது அவசியம். கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை நாங்கள் வலியுறுத்துவதால் சம்பந்தப்பட்ட எவரது தரப்பிலும் அதிகப்படியான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்நிலையில் , நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்களை சட்டவிரோதமாக கைது செய்தறதற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதை எதிர்த்து  குரல் எழுப்பியதற்காக மாண்புமிகு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜி அவர்களுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.