ஜலந்தர் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றி, பகவந்த் மான் அரசு சிறப்பாக செயல்பட்டதால் கிடைத்த வெற்றி- கெஜ்ரிவால்

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றி, முதல்வர் பகவந்த் மான் அரசு சிறப்பாக செயல்பட்டதால் கிடைத்த முன்னோடியில்லாத வெற்றியாகும் என்று அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்த காங்கிரஸின் சன்தோக் சிங் சவுத்ரி கடந்த ஜனவரியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றபோது மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த 10ம் தேதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி மற்றும் சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 19 பேர் போட்டியிட்டனர். ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவானது.

சுஷில் குமார் ரிங்கு
ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு (3,02,279 வாக்குகள்) தனது நெருங்கிய போட்டியாளரான காங்கிரஸின் கரம்ஜித் கவுரை (2,43,588 வாக்குகள்) சுமார் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பா.ஜ.க. வேட்பாளர் இந்தர் இக்பால் சிங் 3வது இடத்தையும், சிரோமணி அகாலி தளம் வேட்பாளர் சுக்விந்தர் குமார் சுகி நான்காவது இடத்தையும் பிடித்தனர். ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது குறித்து அந்த கட்சியின் தலைவரும்,  டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,  முதல்வர் பகவந்த் மான் அரசாங்கத்தின் நல்ல பணியால் இது ஒரு முன்னோடியில்லாத வெற்றியாகும். கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸின் கோட்டையாக இருந்த தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார் என்று தெரிவித்தார்.

விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பவர்கள்தான் தேச விரோதிகள்… பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய சுக்பீர் சிங் பாதல்

சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில்,  ஜலந்தர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, எங்கள் கட்சியின் உண்மையான ஜனநாயக மரபுகளில் பணிவுடன் ஆணையை ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்ற சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு நாங்கள் வாழ்த்துகிறோம். அவர்கள் (ஆம் ஆத்மி கட்சி) வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.  மத்திய மற்றும் மாநில அரசுகளின் பலம் உட்பட அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக கடுமையாக உழைத்து துணிச்சலாக போராடியதற்காக சிரோமணி அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று பதிவு செய்தார்.