சிசோடியா கைது, நல்ல பணிகள் நடைபெறுவதை பிரதமர் விரும்பவில்லை.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி


டெல்லியில் நல்ல பணிகள் நடைபெறுவதை பிரதமர் விரும்பவில்லை அதனால்தான் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லி அரசு செய்த நல்ல வேலையை தடுக்க, மணிஷ் சிசோடியாவும், சத்யேந்தர் ஜெயினும் சிறை கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்பட்டனர். மதுபானக் கொள்கையில் ஊழல் இல்லை, நல்ல வேலை நடைபெறுவதை பிரதமர் விரும்பவில்லை. பணிகள் நிறுத்தப்படாது. 

மோடி

அவர்களின் நோக்கம் ஊழலை நிறுத்துவது அல்ல, ஆனால் டெல்லியில் செய்யப்பட்ட நல்ல பணிகளை நிறுத்துவது. சிசோடியா வீட்டில் பல மணி நேர சோதனைகளுக்கு பிறகு சி.பி.ஐ. அதிகாரிகளால் ரூ.10 ஆயிரம் கூட மீட்க முடியவில்லை. மணிஷ் சிசோடியா பா.ஜ.க.வில் சேர்ந்தால், நாளைக்குள் அவர் விடுதலையாகி விட மாட்டாரா?. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வீடு வீடாக சென்று  பிரச்சாரம் செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு.. நடிகர் சுஷாந்த் வழக்கு குறித்து மனிஷ் சிசோடியா கிண்டல்

டெல்லியின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி குற்றச்சாட்டு காரணமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. இந்நிலையில் சத்யேந்தர் ஜெயினும், மணிஷ்  சிசோடியாவும் தங்கள்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து  ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை புதிய அமைச்சர்களாக நியமிக்க, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை கவர்னருக்கு பரிந்துரை செய்தார்.