#BREAKING அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் - மகிழ்ச்சியில் தொண்டர்கள்!!
Updated: May 10, 2024, 14:33 IST1715331817487

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது . டெல்லி மாநிலத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.