ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 2 பைலட்டுகள் உயிரிழப்பு

 
accident

அருணாச்சல பிரதேசத்தின் மண்டல் ஹில்ஸ் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

ஒரு சாதாரண படம்


இன்று காலை 09:15 மணியளவில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள போம்டிலா அருகே ராணுவ ஏவியேஷன் சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று விமானிகள் உடனான தகவல் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. போம்டிலாவின் மேற்கே மண்டலா ஹில்ஸ் பகுதிக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது.விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் இருந்த நிலையில், அவர்களின் உடல் அதே பகுதியில் கண்டறியப்பட்டது. 

ராணுவ ஹெலிகாப்டர் நடுவழியில் தொடர்பை இழந்து செங்கே கிராமத்தில் இருந்து மிசமாரிக்கு சென்று கொண்டிருந்தது. மதியம் 12.30 மணியளவில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக அருணாச்சலப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. பனிமூட்டமே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக மலைமீது மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 6 மாதத்தில் நடந்த மூன்றாவது ஹெலிகாப்டர் விபத்து இதுவாகும்.