ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்தடைந்தார் அர்ஜென்டினா அதிபர்!
டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ ஏஞ்சல் பெர்னாண்டஸ் டெல்லி வந்தடைந்தார்.
சர்வதேச அளவிலான ஜி20 அமைப்புக்கு இந்தியா இந்த முறை தலைமை ஏற்றுள்ளது. அதன்படி ஜி20 குழுவின் 18 வது மாநாடு நாளை முதல் 10ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன. அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலியா பிரதமர் , பிரிட்டன் பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை விருந்து அளிக்கிறார். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர்.
இந்த நிலையில், அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ ஏஞ்சல் பெர்னாண்டஸ் டெல்லி வந்தடைந்தார். டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ ஏஞ்சல் பெர்னாண்டஸ் டெல்லி வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ ஏஞ்சல் பெர்னாண்டசை மத்திய எஃகு மற்றும் ஊரக வளர்ச்சிக்கான இணை மந்திரி பக்கன் சிங் குலாஸ்தே வரவேற்றார்.