விபத்தில் சிக்கிய கார்- சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அமைச்சரின் கான்வாய்

 
AP High Court Judge V Sujatha Injured in car accident

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி சுஜாதா பயணம் செய்த கார் தெலங்கானா மாநிலம் சூரியப்பேட்டை அருகே விபத்துக்குள்ளான.

AP HC Judge V Sujatha hurt in road mishap

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி சுஜாதா பயணம் செய்த கார் தெலங்கானா மாநிலம் சூரியப்பேட்டை மாவட்டம் சிவ்வென்லா மண்டலத்தில் உள்ள திருமலகிரி என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. உடனடியாக அங்கு வந்த போலீசார், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சூர்யாபேட்டை மருத்துவமனைக்கு 
அழைத்து சென்றனர். அப்போது அவ்வழியாக  சென்று கொண்டிருந்த தெலங்கானா  மின்சார  அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி தகவல் அறிந்து, சூர்யாப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று  நீதிபதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

మంత్రి జగదీష్ రెడ్డి సమయస్పూర్తి... | Minister Jagadish Reddy Helps Ap High  Court Advocate Sujatha Injured In Road Accident, Minister Jagadish Reddy , Ap  High Court Advocate Sujatha , Road Accident, Suryapet, Traffic


இதனையடுத்து  மேல் சிகிச்சை  தேவை என டாக்டர்கள் கூறியதால், உடனடியாக போலீசாரை எச்சரிக்கை செய்தார். சூர்யாபேட்டையில் இருந்து ஹைதராபாத் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர்செய்ய உள்ளூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். ஒருபுறம், கனமழை பெய்த நிலையில் செல்லும் வழியில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க நீதிபதி சுஜாதா பயணித்த ஆம்புலன்சை அமைச்சரின் கான்வாய்க்கு நடுவில் வரவழைத்து ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் ஹைதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டு  நீதிபதி சுஜாதா  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  சரியான நேரத்தில் நீதிபதியை  ஐதராபாத் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.