மக்களவையில் ராகுல் காந்தியின் வருகை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் சராசரி வருகையை விட குறைவு.. அனுராக் தாக்கூர்

 
ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் பேச அனுமதி இல்லை என்கிறார் ஆனால் மக்களவையில் ராகுல் காந்தியின் வருகை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் சராசரி வருகையை விட குறைவாக உள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இன்று இந்தியா உலக வல்லரசாக வளர்ந்து வருகிறது, மேலும் இந்தியா ஜி20 தலைவராக உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவின் முன்னேற்றத்தை காட்டுகின்றன. ஆனால், மறுபுறம், ராகுல் காந்தி இந்தியாவை அவமானப்படுத்த எந்த வாய்ப்பையும் விட்டுவிடவில்லை. ராகுல் காந்தி வெளிநாடு சென்று நாட்டை அவமதிக்கிறார். 

டிராக்டர்களில் சோபா அமைத்து விவசாயிகளுக்காக சிலர் போராடுகிறார்கள்… ராகுலை கிண்டல் செய்த அனுராக் தாக்கூர்

ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வந்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பேச அனுமதி இல்லை என்று கூறுகிறார். ஆனால் மக்களவையில் அவரது வருகை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் சராசரி வருகையை விட குறைவாக உள்ளது. ஊழலின் கலை மற்றும் கலை வாயிலாக ஊழல் செய்வது எப்படி என்பது காங்கிரஸூக்கு தெரியும். அவர்கள் (காங்கிரஸ்) நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். 

காங்கிரஸ்

அவர்கள் (காங்கிரஸ்) தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் தங்களது கேம்பிரிட்ஜ் அழுகையை நிறுத்த வேண்டும். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்குகளை விசாரிக்கும் அமைப்புகள், இப்போது காங்கிரஸின் ஊழல் மாதிரி குறித்து ஒரு வழக்கு ஆய்வு நடத்தி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.