லாலுவின் ஒரே முழக்கம்.. நீங்கள் எனக்கு நிலம் கொடுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை தருகிறேன்... மத்திய அமைச்சர் கிண்டல்

 
லாலு பிரசாத் யாதவ்

நீங்கள் எனக்கு ப்ளாட் (நிலம்) கொடுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை தருகிறேன் என்பதுதான் லாலு பிரசாத் யாதவின் ஒரே முழக்கம் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கிண்டல் செய்தார்.

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகளுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனுராக் தாக்கூர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அனுராக் தாக்கூர் கூறியதாவது:

டிராக்டர்களில் சோபா அமைத்து விவசாயிகளுக்காக சிலர் போராடுகிறார்கள்… ராகுலை கிண்டல் செய்த அனுராக் தாக்கூர்

லாலு பிரசாத் யாவுக்கு ஒரே ஒரு முழக்கம் இருந்தது. நீங்கள் எனக்கு ப்ளாட் (நிலம்) கொடுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை தருகிறேன். ஒவ்வொருவரும் அவரவர் ஊழலின் மாடலை வெளியிட்டு உள்ளனர். இன்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா  தளம் மீண்டும் கூட்டணியில் இணைந்திருக்குபோது, லாலு மற்றும் குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். 

சுஷில் குமார் மோடி

நிதிஷ் குமாரின் ரெய்டுகளின் நேரம் குறித்த நிதிஷ் குமாரின் கேள்விகளுக்கு பா.ஜ.க. அமைச்சர் சுஷில் மோடி பதிலடி கொடுத்துள்ளார். சுஷில் மோடி கூறுகையில், நிதிஷ் குமார் இன்று எளிதாக மாறி விடுகிறார். லாலு பிரசாத் மற்றும் காங்கிரஸை ஆதரிப்பதன் மூலம் பிரதமர் பதவியை பெற முடியும, அப்போது தான் அவர் உணர்கிறார். லாலு பிரசாத் யாதவையும் அவரது குடும்பத்தினரையும் யாராலும் காப்பாற்ற முடியாது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. வலுவான ஆதாரம் உள்ளது என தெரிவித்தார்.