திருப்பதி மலைப்பாதையில் சுற்றித் திரிந்த மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது!

 
tn

திருப்பதி மலைப்பாதையில் சுற்றித் திரிந்த மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது.

tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த மாதம் 11ஆம் தேதி நெல்லுரை சேர்ந்த தினேஷ் அவரது குடும்பத்தினருடன் வருகை புரிந்த நிலையில், அவரது ஆறு வயது மகள் லட்ஷிதா திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் மறுநாள் காலை வனப்பகுதியில்  காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதை தொடர்ந்து    சிறுமி லட்ஷிதாவை சிறுத்தை தாக்கியிருப்பது தெரியவந்தது.திருப்பதி மலைப்பாதையில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது .

அத்துடன்  திருமலை திருப்பதியில் முதலாவது பாதையில் இருக்கும் யானை வளைவு அருகே சிறுத்தை புலியும் , ஸ்பெஷல் டைப் காட்டேஜ் பகுதியில் கரடி நடமாட்டமும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதுத்தவிர   முள்ளம் பன்றி , காட்டுப்பன்றிகள் , புனுகு பூனைகள் ஆகியவை நடமாட்டம் இரவில் இருப்பது தானியங்கி முறையில் படம் பிடிக்கும் ட்ராப் கேமராக்களில் பதிவாகின.  இதனால் சிறுத்தைகளை பிடிக்க 6 கூண்டுகள் வைக்கப்பட்டன. அதன்படி திருப்பதி கோயில் மலைப்பாதையில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத்துறையினர் கூண்டில் சிக்கியது. 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்தது.

tn

இந்நிலையில் திருப்பதி நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.