ஜானதிபதி மாளிகையில் நடமாடிய விலங்கு சிறுத்தையா? டெல்லி போலீஸ் விளக்கம்

 
பூனை

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பிரத்மர் மோடி பங்கேற்பு நிகழ்ச்சியில் தென்பட்டது காட்டு விலங்கு அல்ல, சாதாரண வீட்டு பூனை என டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

tn

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடந்த பிரமாண்ட விழாவில், வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் பிற உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட 8,000 விருந்தினர்கள் கலந்துகொண்டார். ஆனால் சமூக வலைதளங்களில், அழைக்கப்படாத விருந்தினர் ஒருவர் கேமராவில் சிக்கியிருப்பது வைரலாகி வருகிறது. பிஜேபி எம்பி துர்கா தாஸ் உகே, பதவியேற்பு நடைமுறையை முடித்துக் கொண்டு ஜனாதிபதி திரௌபதி முர்முவை வாழ்த்திக் கொண்டிருந்தபோது, ​​பின்புறம்  பூனை போன்ற விலங்கு ஒன்று நடந்து சென்றது. அது சிறுத்தையா? சாதாரண பூனையா? அல்லது நாயா? ஜனாதிபதி மாளிகையில் எந்த விலங்கு சாதாரணமாக உலா வந்தது உள்ளிட்ட கேள்விகளுடன்  சமூகவலைத்தளத்தில் அதற்கான வீடியோ பரவி வந்தது. 


இந்நிலையில் ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் ஊடகங்களில் தெரிந்த விலங்கு சாதாரணமான பூனை. அது காட்டு விலங்கு அல்ல.. தயவு செய்து இதுபோன்ற அற்பமான வதந்திகளை பரப்பாதீர்கள் என டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.