நின்றுகொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதிய கார்- 3 பேர் பலி

 
accident

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

accident

ஆந்திர மாநிலம்   நெல்லூர் மாவட்டம் மனுபோலு மண்டலம் பத்வேலு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். கொடவலூர் மண்டலம் தாமேகுண்டா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் சென்னை நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த  கண்டெய்னர் லாரி மீது வேகமாக சென்று மோதினர்.

இந்த விபத்தில் மூன்று வயது சிறுவன் உள்பட மூன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்த  விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கூடுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது. மேலும் இந்த விபத்து குறித்த கூடுதல் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.