ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து- கிராமம் முழுவதும் எரிவாயு கசிவு

 
andhra andhra

ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.  கிணற்றில்  ஏற்பட்ட கசீவு தீ பிடித்து எரிந்து வருவதால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Gas Leak Triggers Massive Fire At ONGC Well In Andhra Pradesh's Konaseema
 
ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் மாலிகிபுரம் மண்டலம் இருசுமண்டா கிராமத்திற்கு அருகில் உற்பத்தியில் இருந்த ஓ.என்.ஜி.சி. கிணற்றில்  வேலை செய்வதை நிறுத்திவிட்டு பழுதுபார்க்கும் பணிக்காக ஒரு ரிக் மூலம் மேற்கொள்ளப்பட்டது. பழுது பார்க்கும் பணியின்போது  ஏற்பட்ட கசிவால் திடீரென கச்சா எண்ணெய் கலந்த பெரிய அளவிலான எரிவாயு   கிராமம் முழுவதும் பரவி மூடுபனி போன்ற வெள்ளை வாயு மேகங்களால் அப்பகுதியை மூடியது.  கசிவு ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே எரிவாயு தீப்பிடித்தது தென்னை தோட்டங்கள் மற்றும் பயிர் வயல்களில் மத்தியில் எரிவாயு பரவியதால் மக்கள் பீதியடைந்தனர்.

Massive gas leak from ONGC well triggers panic in Andhra Pradesh's Konaseema  district - The Statesman

நிலைமை மேலும் ஆபத்தானதாக மாறும் என்று எதிர்பார்த்து அதிகாரிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்டனர். கிராமத்தில்  உள்ளவர்கள் யாரும் வீட்டிற்குள் இருக்க வேண்டாம் என்றும் உடனடியாக வெளியே வர வேண்டும் என்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் மைக்ரோஃபோன் மூலம்  அறிவிப்புகளை வெளியிட்டதால் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் லக்கவரம் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் கிராமத்தில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஓ.என்.ஜி.சி. தொழில்நுட்பக் குழுக்கள் கசிவைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.