“எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி ஒரு கட்டுரை எழுதுவ?”- பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்!

 
s

ஆந்திராவில் நடைப்பயிற்சியில்  மேற்கொண்ட பத்திரிக்கை நிருபர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Indian journalist stabbed to death in Andhra Pradesh - Committee to Protect  Journalists


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி. கோட்டாவில் பிரபல தெலுங்கு தின பத்திரிக்கையான  ஆந்திர ஜோதியில்  நிருபராக கடந்த 30 ஆண்டுகளாக  ஜெகன்மோகன் ரெட்டி   பணி புரிந்து வந்தார். இந்தநிலையில்  அவர் இன்று காலை வழக்கம்போல் வ.கோட்டாவில்  பிரஜாசக்தி நிருபர் சுப்ரமணியத்துடன் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஜெகன் மோகன் ரெட்டியை கண்முடிதனமாக நடுரோட்டில்  துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற சுப்ரமணியத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த சுப்ரமணியத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி ஜெகன் மோகம் சடலத்தை  பிரதே பரிசோனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைக்கு முக்கிய காரணம் சில நாட்கள் முன்பு செம்மரக்கடத்தலில் உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கட்டுரையால் அதற்கு பழி வாங்கும் விதமாக இந்தப்கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ள நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆந்திர ஜோதி நிருபர் ஜெகன்மோகன் ரெட்டி  கொலை செய்யப்பட்டதை கண்டித்து வி.கோட்டாவில் பத்திரிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டு கொலைக்கு காரணமானவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று கோரினர். போலீசார் பத்திரிக்கையாளர்களை சமாதனப்படுத்தி உரிய நியாயம் கிடைக்க செய்வதாக உறுதி அளித்தனர். இந்த கொலையை கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு கொலை செய்தவர்கள் பிடித்து கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரினர். இதுகுறித்து பாலமனேர் தொகுதி எம்.எல்.ஏ. அமர்நாத் ரெட்டி கண்டனம் தெரிவித்து பாலமனேரு தொகுதியில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது  அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. ஒரு பத்திரிகையாளர் மீதான இந்தத் தாக்குதலைத்  வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறினார். அமைதியான வி. கோட்டாவின் மையப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது  குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரை கேட்டு கொண்டார்.  இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக்கூடாது என்றும், இந்தச் சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவரின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும் என்றும்   இறந்தவரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்து கொண்டார்.