ஆந்திரா ஆம்னி பேருந்து தீ விபத்தில் திடீர் திருப்பம்
ஆந்திரா, ஆம்னி பேருந்து தீ விபத்தில் 20 பயணிகள் பலியான சம்பவத்தில், பைக்கின் பின்னால் ஆம்னி பஸ் மோதியதாக முதலில் கூறப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு 43 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பேருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் மற்றும் பைக்கில் வந்த இளைஞர் என 19 பேர் உயிரிழந்ததோடு ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்வதற்காக ஆந்திர மாநில அரசு 16 குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பேருந்து புறப்பட்ட இடத்திலிருந்து விபத்து நடந்த இடத்தின் வரை உள்ள டோல்கேட்டில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதே போன்று விபத்துக்கு காரணமான பைக் ஓட்டி வந்த சிவசங்கர் எங்கிருந்து புறப்பட்டார்?, எங்கிருந்து எப்படி வந்தார் போன்றவற்றையும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் ஆந்திரா, ஆம்னி பேருந்து தீ விபத்தில் 20 பயணிகள் பலியான சம்பவத்தில், பைக்கின் பின்னால் ஆம்னி பஸ் மோதியதாக முதலில் கூறப்பட்ட நிலையில் ஆந்திர போலீசார் நடத்திய விசாரணையில் விபத்து எப்படி நடந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான பைக் மீது பேருந்து மோதியதில் பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.


