தடியால் அடித்து கொள்ளும் பேரணியில் இருவர் பலி! ஆந்திராவில் சோகம்

 
s

ஆந்திர மாநிலம் கர்னூல் தசரா உற்சவத்தில் சம்பிரதாய தேவரகட்டு பன்னி திருவிழாவில் தடியால் அடித்து கொள்ளும் உற்சவ பேரணியில் இருவர் பலியாகினர்.

Two killed, 100 injured in traditional stick fight in Andhra's Kurnool

த்ரேதா யுகத்தில், உலக நலனுக்காக தேவரகட்டு மலைகளில் முனிவர்கள் யாகங்களைச் செய்தனர். இந்த யாகத்தை மணி, மல்லசுரன் என்ற அரக்கர்கள் அவர்களைத் தடுத்தனர். அவர்களின் தாக்குதல்களைத் தாங்க முடியாமல், முனிவர்கள் சிவன் மற்றும் பார்வதியிடம் தங்களைக் காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்தனர். முனிவர்களின் வேண்டுகோளைக் கேட்ட சிவபார்வதி மாலா மற்றும் மல்லேஸ்வரராக அவதாரம் எடுத்து அசுரர்களைக் கொன்றதாக பக்தர்கள் நம்புகிறார்கள். மாலா மற்றும் மல்லேஸ்வரர் சாமிகள் மணி, மல்லசுரன் என்ற அரக்கர்களுடன் கடுமையாகப் போரிட்டனர். மனிதர்களின் கைகளில் இறக்காமல் இருக்க வரம் பெற்ற அந்த அசுரர்களுடனான போரில்  சிவனின் கைகளில் இறப்பதை தங்கள் அதிர்ஷ்டமாகக் கருதிய அசுரர்கள், தங்கள் மரணத்திற்குத் ஒப்பு கொண்டனர். இறப்பதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு ஒரு நரபலி கொடுக்குமாறு தெய்வத்திடம் கேட்டார்கள். அசுரர்கள் நரபலி கேட்டபோது, ​​ஒவ்வொரு விஜயதசமியிலும் ஒரு ஆட்டின் தொடையின் இரத்தத்தை காணிக்கையாக வழங்குவதாக சிவன் உறுதியளித்தார். அப்போதிருந்து, தீமையை நன்மை வென்றதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று மாலா மல்லேஸ்வர சுவாமி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. 


அவ்வாறு இந்த ஆண்டும் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹோலசகுண்டா மண்டலத்தின் தேவரகட்டில் ஒவ்வொரு ஆண்டும் பன்னி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தின் போது  சிலைகளைப் பாதுகாக்க மூன்று கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒருபுறமும் கட்டைகளுடன் மறுபுறம் ஏழு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சண்டையிடுவார்கள். இதனை காண பல பக்தர்கள் தேவரகட்டுக்கு வருவார்கள். இந்த விநோத உற்சவ திருவிழாவிற்காக கர்னூல் மாவட்ட  எஸ்பி விக்ராந்த் பாட்டீல், துணை கலெக்டர்  மௌரிய பரத்வாஜ், ஆர்டிஓ பரத் நாயக் ஆகியோர் தலைமையில்  ஊர்வலத்தை  மேற்பார்வையிட்டனர். தேவரகட்டுவில் உள்ள 800 அடி உயர மலையில் நடைபெற்ற  மாலா மல்லேஸ்வர சுவாமி தசரா பன்னி உற்சவத்தில்  காலையில் சாமி தாயார் திருக்கல்யாணம் நடந்தது. அதன் பிறகு ஊர்வலம் தொடங்கி சாமி சிலைகளை எடுத்து கொண்டு செல்ல  நெரானி, நெரானிகிதண்டா மற்றும் கோத்தபேட்டா கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒருப்புறமும் அரிகேரா, அரிகேரதண்டா, சுலுவாய், எல்லார்தி, குருகுண்டா, பிலேஹால் மற்றும் விருபபுரம் கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மறுபுறம் இருந்து இருப்பிரிவினர் குச்சிகளால் தாக்கி கொண்டதில் இரத்தக்களரியாக மாறியது.  சாமி   சிலைகள் பசவன்னகூடுவை அடையும் போது கட்டைகளால் தாக்கி கொள்ளும்   சண்டை நிறுத்தப்பட்டது. இந்த நூதன உற்சவ மோதலில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். மொத்தம் நூறு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அதோனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பல பக்தர்கள், காயமடைந்தாலும், அங்கு கிடைக்கும்  மஞ்சள் கொண்டு காயத்தில் பூசி கொண்டு  எந்த சிகிச்சையும் எடுக்காமல் சென்றனர்.