திருடர்களுக்கு ரஜினி ஏன் ஆதரவு? - ரோஜா

 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்: நடிகை ரோஜா அதிரடி!

சந்திரபாபு நாயுடு நல்லவர் என மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

Rajinikanth

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அவரை ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். வருக்கு செப்.22 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்நிலையில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் உரையாடியதாகவும், தவறு செய்யாத உங்கள் தந்தை விரைவில் மீள்வார் என ஆறுதல் தெரிவித்ததாகவும் தெரிகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, “எண்டிஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியதற்கு ஆந்திராவில் எவ்வளவு எதிர்ப்பு கிளம்பியது என அனைவருக்கும் தெரியும். சந்திரபாபு நாயுடு நல்லவர் என மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். மக்களின் நலனுக்காக சிறை சென்றவர் என்றால் ஆறுதல் கூறுவது சரி எனக் கூறலாம். ஆனால் திருடர்களுக்கு ஏன் ரஜினி ஆதரவு தெரிவிக்கிறார்? அரசியலுக்கு வர வாய்ப்பிருந்தபோது ரஜினி வராதது ஏன்? தங்களை காப்பாற்றிக்கொள்ள தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவை சுற்றி சுற்றி வருகிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.