திருப்பதியில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி!

 

திருப்பதியில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி!

கொரோனா அச்சுறுத்தலால் முதல்கட்டமாக மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களையும் மூட அரசு உத்தரவிட்டது. அதன் படி மால்கள், தியேட்டர்கள், கோவில்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கோவில்களிலும் வழக்கம் போல பூஜைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

திருப்பதியில் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி!

அதே போல கடந்த மார்ச் மாதத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பாடத நிலையில், பூஜைகள் நடந்து வந்தது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய சூழலில் பரிசோதனை முயற்சியாக, உள்ளூர் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்யலாம் என்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.