ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் எப்போது? அப்டேட் இதோ!!

 
tt

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். மும்பையில் உள்ள பிகேசியில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.

fffff


தங்கம் மற்றும் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட அழைப்பிதழில், இந்து வேத மரபுகளின்படி திருமண விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி திருமணமும்,  ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை பிரமாண்ட திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது. 

rr

முன்னதாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்வைபோக நிகழ்ச்சியில் உலகின் பிரபலங்கள் பலரும் பாலிவுட் நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். சொகுசு படகு பயணம் இத்தாலியில் இன்று தொடங்கி பிரான்ஸில் ஜூன் 1 ஆம் தேதி நிறைவடைகிறது.இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரன்வீர் சிங், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவியும், நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் ஜோடி  இத்தாலிக்கு புறப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து 300 விஐபி விருந்தினர்கள் இதில் பங்கேற்கின்றனர்.