டெல்லி வந்தடைந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு உற்சாக வரவேற்பு!

 
itali pm

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டெல்லி வந்தடைந்த இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

சர்வதேச அளவிலான ஜி20 அமைப்புக்கு இந்தியா இந்த முறை தலைமை ஏற்றுள்ளது.  அதன்படி ஜி20 குழுவின் 18 வது மாநாடு  நாளை முதல் 10ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன.  அமெரிக்க அதிபர் ஜோபைடன்,  ஆஸ்திரேலியா பிரதமர் , பிரிட்டன் பிரதமர்,  ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை விருந்து அளிக்கிறார். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் டெல்லிக்கு வருகை தருகின்றனர். டெல்லி வரும் தலைவர்களுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். 


இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி டெல்லி வந்தடைந்தார். இத்தாலி பிரதமரை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி ஷோபா கரண்ட்லஜே நேரில் சென்று வரவேற்றார். இதேபோல் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக டெல்லி விமான நிலைய வளாகத்தில் சிறப்பு கலாச்சார நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்து ரசித்த இத்தாலி பிரதமர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.