தோல்விகளில் இருந்து திசை திருப்ப முயற்சி.. ₹2000 நோட்டுகள் நிறுத்தம் குறித்து சித்தராமையா விமர்சனம்..

 
தோல்விகளில் இருந்து திசை திருப்ப முயற்சி.. ₹2000 நோட்டுகள் நிறுத்தம் குறித்து சித்தராமையா விமர்சனம்..

“பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி!” என  ₹2000 நோட்டுகள் நிறுத்தம் குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும்  மணிக்கணக்கில் வரிசையில் காத்துக்கிடந்து கடும் சிரமங்களுக்கு ஆளாகினார்.  அதன்பின்னர் 2000 ரூபாய் நோட்டுகள்  ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டது.

தோல்விகளில் இருந்து திசை திருப்ப முயற்சி.. ₹2000 நோட்டுகள் நிறுத்தம் குறித்து சித்தராமையா விமர்சனம்..

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தினமும் ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பின்னர் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் இடையே கடும் மன உலைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 அந்தவகையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “பிரதமர் மோடியால், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு தடை பாஜகவின் கொள்கைகள் பற்றி அவர்களுக்கே தெளிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது; ரூ.2000 நோட்டுகளை தடை செய்யும் திட்டம் இருந்தால் ஏன் அதனை அறிமுகப்படுத்தினார்கள்? பாஜகவின்  தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி” என விமர்சித்துள்ளார்.