தோல்விக்கு EVM மீது ராகுல் பழிபோடுவார் - அமித்ஷா

 
பதவியை பறிக்கொடுக்கப்போகும் அமித்ஷா!

ஜூன் 4ல் தேர்தல் தோல்விக்கு பின் EVM மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, “ஜூன் 4ல் தேர்தல் தோல்விக்கு பின் EVM மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டுவார். பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கும், கோயிலை கட்டியவர்களுக்குமான தேர்தல் இது. 70 ஆண்டுகளாக காங்கிரசால் முடக்கி வைக்கப்பட்ட ராமர் கோயிலை மோடி கட்டினார். ராமர் கோவில் கட்ட 70-70 ஆண்டுகளாக காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும் முட்டுக்கட்டை போட்டனர். ஆனால் நரேந்திர மோடியின் அரசு 5 ஆண்டுகளில் அந்த வழக்கில் வெற்றி பெற்று பூமி பூஜை செய்து கட்டினார்.

நான்காம் தேதி மோடி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார். 12 லட்சம் கோடி ஊழல் செய்த கூட்டணி கட்சிக்கும் 25 பைசா கூட ஊழல் செய்யாத மோடி ஜிக்கும் நடக்கும் தேர்தல் இது. விடுப்பு ஏதும் இல்லாமல் நாட்டிற்காக கடுமையாக உழைக்கிறார் மோடி” என்றார்.