பாஜக வெற்றி பெற்றால் அயோத்தியில் ராமரை தரிசிக்க இலவசமாக அழைத்து செல்லப்படும்- அமித்ஷா

 
அமித்ஷா

தெலுங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால், அயோத்தியில் ராமரை தரிசிக்க இலவசமாக அழைத்து செல்லப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.  

பாஜக இருக்கும் வரை அங்குல நிலத்தைக் கூட கைப்பற்ற முடியாது உள்துறை அமைச்சர்  அமித்ஷா

தேர்தல் பிரசாரத்திற்காக தெலுங்கானா வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்வாலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தெலங்கானாவில் கே.சி.ஆர். அரசு மிஷன் காகத்தியா மற்றும் மிஷன் பகீரதா நீர்பாசன திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவேன் என்று சொல்லி கேசிஆர் ஏமாற்றிவிட்டார். ஊழல்,  பொய்யான பிரச்சாரங்களால் மக்களை  ஏமாற்றிய முதல்வர் கேசிஆர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஜோகுலாம்பா கோவிலின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ரூ.70 கோடி வழங்கினார். ஆனால் அந்த பணத்தை கேசிஆர் செலவிடவில்லை. தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட போது வருவாய் மிகுந்த மாநிலமாக இருந்தது கே.சி.ஆர். ஆட்சியில்  இப்பொழுது மூன்று லட்சம் கோடி கடனில் உள்ளது. கே.சி.ஆர். ஆட்சியில் தெலுங்கானாவை மது வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளார்.

கோழித் தீவன ஊழல் முதல் மிஷன் காகத்தியா ஊழல் வரை நீண்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நல்கொண்டா நகராட்சிக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.400 கோடி கே.சி.ஆரின் ஊழல் அரசால் தவறாக பயன்படுத்தப்பட்டது. கே.சி.ஆர் அரசு  பி.சி. சமூகத்தை  ஏமாற்றி விட்டார். ஆனால் தெலுங்கானாவில் பி.சி.களுக்கு பாஜக அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.  தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பிசி நபர் ஒருவர் முதல்வராக்கப்படுவார். காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் பி.சி. சமூக துரோகிகள் ஆவர்.

காங்கிரஸ், பிஆர்எஸ், எம்ஐஎம் கட்சிகள்.. 2ஜி, 3ஜி, 4ஜி கட்சிகள் தெலுங்கானாவில் இந்தக் கட்சிகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அமித்ஷா அழைப்பு விடுத்தார். பிஆர்எஸ் கட்சிக்கு விஆர்எஸ் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவுக்கு வாய்ப்பு அளித்தால் 5 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். தெலுங்கானா மக்களின் எதிர்காலத்தை இந்தத் தேர்தல்கள் தீர்மானிக்கும் , பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலம் வளர்ச்சி செய்து காண்பிக்கப்படும்.

கோயில்களை பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  பேச்சு.! | Union-Minister-Amit-Shah-spoke-about-temple-issues-Kerala

இரட்டை எஞ்சின் இயந்திரத்தால் மட்டுமே மாநிலத்தில் வளர்ச்சி சாத்தியமாகும். பொய்கள் சொல்வதில் கேசிஆர் சாதனை படைத்துள்ளார். கட்வாலில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி செய்யவில்லை. கிருஷ்ணா நதியில் பாலம் கட்டப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கட்வாலாவில் கைத்தறி நெசவாளர்களுக்காக கைத்தறி நெசவாளர் பூங்கா கட்டப்படவில்லை.  

கட்வாலாவில் இரட்டை படுக்கையறை வீடுகள் தரப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்பதை நினைவுபடுத்தினார். நிஜாமின் ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து தெலுங்கானா  சர்தார் வல்லபாய் படேல் மூலம் விடுவிக்கப்பட்டதுப்என நினைவுபடுத்தினார். கே.சி.ஆர் ஓவைசியிடம் சரணடைந்ததால்  செப்டம்பர் 17ஆம் தேதி தெலுங்கானா விடுதலை நாள் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படவில்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கானா விடுதலை நாள் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படும்.  முஸ்லிம்களுக்கான மதரீதியிலான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது. முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும், ஓபிசி, எஸ்டியினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். உங்கள் ஒவ்வொரு வாக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் வாக்கு தெலுங்கானாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்” என்றார்.