2025ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் தாமரை மலரும்- அமித்ஷா

 
Bihar amitsha

2024ம் ஆண்டுக்குள் லாலு பிரசாத் மற்றும் நிதீஷ்குமாரின் கட்சி அழிந்துவிடும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

Wanting to become PM, Nitish Kumar backstabbed BJP: Amit Shah in Bihar |  Cities News,The Indian Express

உள்துறை அமைச்சர் அமித்ஷா பிகார் மாநிலத்தில் "ஜன் பவ்னா மகாசபா" கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2024ம் ஆண்டு தேர்தலில் பிகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவவின் கட்சி அழிந்துவிடும். 2025ம் ஆண்டு பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் தாமரை பீகாரிலும் மலரும்.  நிதீஷ் குமார் எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கும் ஆதரவானவர் அல்ல. குறிப்பாக லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து ஆட்சி செய்யலாம், ஜாதி அரசியல் செய்யலாம், இவை இரண்டுமே இல்லை என்றால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார். அவருக்கான ஒரே சித்தாந்தம் என்பது அவரது முதலமைச்சர் பதவி மற்றும் நாற்காலி அப்படியே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான்” என விமர்சித்தார்.