குஜராத்தில் அறுதிபெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்: அமித்ஷா

 
Bihar amitsha

குஜராத் மாநிலத்தில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் எண்ணிக்கையில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Amit Shah on 2-day visit to Himachal Pradesh from Nov 1, to address 6  rallies


குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகிறது. தேர்தல் பரப்புரைக்காக குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது, “இதற்கு முன்பு உள்ள வரலாற்றை எல்லாம் மாற்றி எழுதும் வகையில் அதிக எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெறும், மேலும் அறுதிபெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என்றார். பிரதமர் நரேந்திரமோடி மற்றும் குஜராத் முதலமைச்சர் படேல் தலைமையில் சிறப்பான ஆட்சியால் மாநில பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாநிலத்தின் வருவாய் அதிகரித்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கும் மேம்பட்டு உள்ளது. மேலும், குஜராத் மாநிலத்தில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசி சமூகத்தினருக்கான பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரியை முதல்வர் படேல் பின்பற்றி வருகிறார்” என்றார்.