2024ல் பா.ஜ.கவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும், பா.ஜ.க.வை வேரறுக்க எங்கள் கட்சி தியாகம் செய்யும்.. அமினுல் இஸ்லாம்

 
அமினுல் இஸ்லாம்

2024ல் பா.ஜ.கவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும், பா.ஜ.க.வை வேரறுக்க எங்கள் கட்சி தியாகம் செய்யும் என்று ஏ.ஐ.யு.டி.எஃப். கட்சியின் பொதுச் செயலாளரும்,  எம்.எல்.ஏ.வுமான அமினுல் இஸ்லாம் தெரிவித்தார்.


அசாமை சேர்ந்த அனைத்து இந்திய ஜனநாயக முன்னணி  (ஏ.ஐ.யு.டி.எஃப்.) கட்சியின் பொதுச் செயலாளரும்,  எம்.எல்.ஏ.வுமான அமினுல் இஸ்லாம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் இருக்கிறோம். தற்போது பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. 

பா.ஜ.க.

நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே மேடையில் ஒன்று சேர வேண்டும். 2024ல் பா.ஜ.கவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். நாங்களும் அதை விரும்புகிறோம். இந்த எதிர்க்கட்சி ஒற்றுமையில் காங்கிரஸூம் பங்கேற்க வேண்டும். அசாமில் தற்போது 16 எம்.எல்.ஏ.க்களும்,ஒரு எம்.பி.யும் உள்ளனர். முன்னதாக அசாமில் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.  தற்போது, அசாம் மாநில சட்டப்பேரவையில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக நாங்கள் இருக்கிறோம்.

காங்கிரஸ்

பா.ஜ.க.வை வேரறுக்க எங்கள் கட்சி தியாகம் செய்யும். காங்கிரஸ் தலைமையுடன் இப்போது எங்களுக்கு எந்த பேச்சுவார்த்தையும் இல்லை, ஆனால் எங்கள் கட்சி பேசத் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்மையில் ஏ.ஐ.யு.டி.எஃப். கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான குழு பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.