ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய நடிகர்கள்

 
allu arjun

சித்தப்பா பவன் கல்யாணுக்காக நடிகர் ராம்சரண், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சில்பா ரவி நண்பருக்காக நடிகர் அல்லு அர்ஜுன் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.


இரண்டு தெலுங்கு மாநிலங்களில் தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ளது.  அனைத்து முக்கிய கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  வெற்றி பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் பிரசாரத்தில் பிரபலங்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  பல்வேறு கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்திற்கு  தெலுங்கு மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.  கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டன.  

இந்த முறை திரையுலக பிரபலங்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பொதுவாகவே அனல் பறக்கும் ஆந்திர தேர்தல், பிரபலங்களின் பிரசாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் நந்தியாலா எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிடும் தனது நண்பர் சில்பா ரவிச்சந்திர ரெட்டி வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகரெட்டியுடன் பிரச்சாரம் செய்தார். இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களும் திரளாக திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

A case has been registered against Allu Arjun

இதேபோல் காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணை ஆதரித்து அண்ணன் மகன் நடிகர் ராம்சரண் தனது சித்தப்பா பவன் கல்யாணை ஆதரித்து நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து பிரச்சாரம் செய்தார்.