கருத்துகணிப்புகளால் அப்செட்! தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கும் இந்தியா கூட்டணி

 
இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள், இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் இன்று சந்திக்கவுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.


ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில்,  இன்று மாலை 4.30 மணிக்கு, தேர்தல் ஆணைய அதிகாரிகளை இந்தியா கூட்டணி கட்சியினர் சந்திக்கவுள்ளனர். அப்போது வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வலியுறுத்தி முறையிட முடிவு செய்துள்ளனர். இன்று காலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.