நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் - இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

 
Parliament

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

வருகிற 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஒரு சில முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரே நாடு, ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவன் உள்ளிட்ட மசோதாக்கல் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Parliament

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படுவதற்கான காரணம் குறித்தும், இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.