உருளைக்கிழங்கு இந்த முறை அரசாங்கத்தை மாற்றும்.. அகிலேஷ் யாதவ்

 
உருளைக்கிழங்கு

மத்திய அரசு அறிவித்த உருளைக்கிழங்குக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை மிகவும் குறைவாக இருப்பதை குறிப்பிட்டு, உருளைக்கிழங்கு இந்த முறை  அரசாங்கத்தை மாற்றும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் உருளைக்கிழங்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர். அதிகப்படியான உருளைக்கிழங்கு வரத்து காரணமாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த ஆண்டை விட விலை பாதியாக குறைந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள உருளைக்கிழங்குக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளின் உற்பத்தி செலவை கூட ஈடுகட்டாது என்று சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

சமாஜ்வாடி தலைவரும், உத்தர பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், பா.ஜ.க. ஆட்சியில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பிரச்சினைகள். உருளைக்கிழங்கின் செலவினத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பு, குறைந்த விலை காரணமாக உற்பத்தி செலவை எடுப்பதே கடினம். குளிர்பதன கிடங்குக்கு வெளியே இரவு முழுவதும் கழித்தும் டோக்கன்களை பெறவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை கோரிக்கை பா.ஜ.க. அரசாங்கத்தால் தொடர்ந்து நிராகரிப்பு. உருளைக்கிழங்கு இந்த முறை அரசாங்கத்தை மாற்றும் என பதிவு செய்துள்ளார்.

சிவ்பால் யாதவ்

அகிலேஷ் யாதவின் சித்தப்பாவும், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான சிவ்பால் சிங் யாதவ் கூறுகையில், உருளைக்கிழங்கு குவிண்டால் ரூ.650க்கு வாங்க அரசு உத்தரவு விட்டுள்ளது. இது போதாது சார். குவிண்டால் ரூ.2,500க்கு விதை வாங்கும் விவசாயிக்கு இந்த ஆதரவு விலை கேலிக்கூத்து. உருளைக்கிழங்கு மூடை ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1,500 என்ற விலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் அதற்கான செலவையாவது அரசு தர வேண்டும்.