சமாஜ்வாடி கூட்டணி உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளிலும் போட்டி... ஷாக் கொடுத்த அகிலேஷ் யாதவ்

 
பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைமையிலான கூட்டணி உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்து இருப்பது, பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

2024 நாடாளுமன்ற  தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அண்மையில் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவியும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்தார். இது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மம்தா பானர்ஜி

இந்த சூழ்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைமையிலான கூட்டணி உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசம் அசம்கரில் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணி உத்தர பிரதேசத்தின் 80 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும். தேர்தலுக்கு முன்  காங்கிரஸூடன் கூட்டணி கிடையாது. 

இறந்து விட்டதாக தவறான செய்தி வெளியான சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா…

பா.ஜ.க.வை தோற்கடிக்க புதிய முன்னணி அமைப்பு குறித்து நம்பிக்கை உள்ளது. புதிய முன்னணியின் சாத்தியமான முகங்களாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இருக்கலாம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சி 2022 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய லோக் தளம், எஸ்.பி.எஸ்.பி., மகான் தளம், அப்னா தளம் மற்றும் ஜன்வாடி கட்சி உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு பின்னர் சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணியில் இருந்து  எஸ்.பி.எஸ்.பி. மற்றும் மகான் தளமும் விலகின.