அமைச்சராக விரும்புகிறார்கள் ஆனால் தங்கள் துறைகள் தொடர்பான பணிகளை செய்ய மாட்டார்கள்... கொந்தளித்த அஜித் பவார்

 
36 மணி நேரத்துக்கு பிறகு டிவிட்டரில் மவுனத்தை கலைத்த அஜித் பவார்….சித்தப்பாதான் எங்க தலைவர்! .

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வராத அமைச்சர்களை குறிப்பிட்டு, அவர்கள் அமைச்சராக விரும்புகிறார்கள் ஆனால் தங்கள் துறைகள்  தொடர்பான பணிகளை செய்ய மாட்டார்கள் என்று  ஆளும் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி அரசாங்கத்தை தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் தாக்கினார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று ராகுல் நர்வேகர் கேள்வி நேரத்தை ஆரம்பித்தவுடன், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அஜித் பவார் கடுமையாக கொந்தளித்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அஜித் பவார் பேசுகையில் கூறியதாவது:  இன்று நடைபெற்ற சிறப்பு அமர்வில் 8 கவன ஈர்ப்பு நோட்டீஸ் பட்டியலிடப்பட்டது. ஆனால் சுற்றுலா தொடர்பான ஒன்றை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

சந்திரகாந்த் பாட்டீல்

ஏனென்றால் அந்த துறை அமைச்சர் மட்டுமே அவையில் உள்ளார். மற்ற அமைச்சர்கள் இல்லாததால் எஞ்சியவற்றை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அமைச்சர்கள் சட்டப்பேரவை நடவடிக்கைகளை பெரிதாக எடுத்துக்  கொள்ளாதபோது இது வெட்கமின்மையின் உச்சம். அவர்கள் அமைச்சராக விரும்புகிறார்கள் ஆனால் தங்கள் துறைகள் தொடர்பான பணிகளை செய்ய மாட்டார்கள்.நாடாளுமன்ற விவகார அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கூட அவைக்கு வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மகாராஷ்டிராவில் சிவ சேனா அரசு ரொம்ப நாளைக்கு ஓடாது… தேவேந்திர பட்னாவிஸ் ஆருடம்

இதனையடுத்து  மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டார். மேலும் பட்னாவிஸ் கூறுகையில், அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறைகள் தொடர்பான பிரச்சினைகள் சட்டப்பேரவையில் எடுத்துக் கொள்ளப்படும்போது உடனிருக்குமாறு கூறப்படும். நேற்றைய நாள் உத்தரவு நள்ளிரவுக்கு பிறகு வந்தது, அமைச்சர்களுக்கு விளக்கம் கேட்க நேரம் கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதற்கு அஜித் பவார், பட்டியலிடப்பட்ட அனைத்து கவன ஈர்ப்பு அறிவிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டவை. எனவே  அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளிடம் இருந்து ஏற்கனவே விளக்கம் பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.