தலைநகர் டெல்லியில் தொடரும் காற்று மாசுபாடு.. கடும்பனி...!

 
delhi
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடும் , கடும்பனியும் தொடர்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் பல்வேறு நிலையங்களில் இருந்து புறப்படும் 25 க்கும் மேற்பட்ட ரயில்கள் அடர்ந்த மூடுபனி காரணமாக தாமதமாக இயக்கப்படுகின்றன. இதே போல
சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரமும் தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. காற்றின் தரக் குறியீடு பல இடங்களில் 200க்கும்,  மேலும் பல இடங்களில் 300க்கும் மேலும் பதிவாகியுள்ளன. தர குறியீடு 50க்கும் அதிகமாக இருந்தாலே அது தரமான காற்று அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் பெரும்பாலான பள்ளிகளிலும் ஹைபிரிட் முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் சட்டசபை தேர்தல் வேலைகளில் மும்முரமாக உள்ளன.