ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்- விமான சேவை பாதிப்பு

 
air india

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Image

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர் கடைசி நேரத்தில் விடுப்பு எடுத்ததால் ரத்து செய்யப்பட்டன. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இதனிடையே பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப அளிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இருப்பினும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விளக்கம் அளிக்க விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.  பிரச்சனையை சுமூகமாக முடிக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.