ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் நீக்கம்!!

 
tn

திடீர் விடுப்பு எடுத்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

tn

நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின. ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்படைந்தன. விமான நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர் கடைசி நேரத்தில் விடுப்பு எடுத்ததால் ரத்து செய்யப்பட்டன. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டினர்.  தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்ததால்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.

air india

இந்நிலையில் திடீர் விடுப்பால் 90 விமானங்கள் ரத்தான நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக விடுப்பு எடுத்து விமானங்கள் ரத்தாக காரணமான நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று திடீரென விடுப்பு எடுத்ததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 2ஆம் நாளாக ஏர் இந்தியா விமான சேவை பாதிப்படைந்துள்ளன. மேலும் சில நாட்களுக்கு சில விமானங்கள் ரத்தாகும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.