ஜி20 அமைப்பில் நிரந்த உறுப்பினரானது ஆப்ரிக்க யூனியன் - பிரதமர் மோடி அறிவிப்பு

ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் நிலையில் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மனிதவளம் போன்றவற்றை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள இது மிகச்சிறந்த நல்வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. ஜி20 மாநாடு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி வருகிறார்.
#WATCH | G 20 in India | President of the Union of Comoros and Chairperson of the African Union (AU), Azali Assoumani takes his seat as the Union becomes a permanent member of the G20. pic.twitter.com/Sm25SD80n9
— ANI (@ANI) September 9, 2023
இந்த நிலையில், ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஆப்பிரிக்க யூனியன் தலைவரை முறைப்படி அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தார். இதன் காரணமாக ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது. ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டதால் ஜி20 அமைப்பு ஜி21 அமைப்பாக மாறவுள்ளது.