கேரளாவில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் : 300 பன்றிகளை அழிக்க உத்தரவு..

 
கேரளாவில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் : 300 பன்றிகளை அழிக்க உத்தரவு..


கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்  பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

கேரளாவில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் : 300 பன்றிகளை அழிக்க உத்தரவு..
இந்தியாவில் பீஹார் உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவாகியுள்ளதாக  அண்மையில் மத்திய அரசு எச்சரித்திருந்தது.  இந்த நிலையில் தற்போது  கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.  ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது,  பன்றிகளை பாதிக்கும் மிகவும் ஆபத்தான வைரஸாகும். கடந்த வாரம்  கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மனந்தவாடி எனும் பகுதியில்  பன்றிகள் தொடர்ந்து உயிரிழந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகள்  போபாலில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கேரளாவில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் : 300 பன்றிகளை அழிக்க உத்தரவு..

பரிசோதனை முடிவில் இறந்த பன்றிகள்  ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள மாநிலம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.   இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர்  கூறுகையில், “பன்றிகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டாவது பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று குறிப்பிட்டார்.   இந்த பன்றிக் காய்ச்சலானது மனிதர்களுக்குப் பரவும் அபாயம் இல்லை என்றாலும்,   பன்றிகளிடம் இருந்து மற்ற விலங்குகளுக்கு வேகமாகப் பரவும் வாய்ப்பு உள்ளதாக என்று கூறப்படுகிறது.