டெல்லியில் புதிய அமைச்சர்களாக அதிஷி மர்லினா, சவுரப் பரத்வாஜ் பதவியேற்பு

 
delhi new Ministers

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய அமைச்சர்களாக அதிஷி மர்லினா மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகிய இருவரும்  பதவியேற்றுக் கொண்டனர்.  

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  இந்த அரசு மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதோடு,  சலுகைகளையும் அரசு வழங்கியதை குற்றச்சாட்டு எழுந்தது.   இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக  சிபிஐ குற்றம் சாட்டியுள்ள நிலையில்,  இதில்  அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவிற்கு  தொடர்பு இருக்கலாம் எனவும்  சிபிஐ சந்தேகிக்கித்தது.   இந்த வழக்கு தொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில்,   விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிசோடியா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கைல் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரும் பதவி விலகினார். இருவரும் தங்களது பதவியை கடந்த மாதம் 28-ந்தேதி ராஜினாமா செய்தனர்.  

manish sisodia

இதனை தொடர்ந்து சவுரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி மர்லினா ஆகியோரை புதிய மந்திகளாக நியமிக்குமாரு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்தார். இந்நிலையில் அதிஷி மர்லினா மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகிய இருவரும் இன்று ஆம் ஆத்மி அரசின் புதிய மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர். டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் அதிஷி மர்லினாவுக்கு கல்வி, பொதுப்பணித்துறை, மின்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளும், பரத்வாஜுக்கு சுகாதாரம், நீர்வளம், கிராம்ப்புற வளர்ச்சி மற்றும் தொழிற்சாலைகள் ஆகிய துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.