மோடி ஒரு பைத்தியக்கார பிரதமர்... நான் பொதுமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்- ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

 
69வது வயதில் அடியெடுத்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி! டிவிட்டரில் டிரெண்டான ஹேப்பிபர்த்டேநரேந்திரமோடி ஹேஸ்டேக்

மோடி ஒரு பைத்தியக்கார பிரதமர் என்று நான் கூறியது, ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதற்கு பொதுமக்கள் என்ன எதிர்வினையாற்றுகிறார்கள் என்று குரல் கொடுத்தேன் என்று காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி  விளக்கம் அளித்தார்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை உறுப்பினருமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று தனது தொகுதியான பெஹ்ராம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நேற்று முன்தினம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து குறித்து ஆஹிர் ரஞ்சன் சவுத்ரியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பதிலளிக்கையில் கூறியதாவது: இப்போது இந்திய மக்கள் மோடி மீது விரக்தியில் உள்ளனர். மோடி ஒரு பைத்தியக்கார பிரதமர் என்று மக்கள் சொல்கிறார்கள். 

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

இப்போது மக்கள் மோடிக்கு எதிராக சென்று விட்டதால், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பொருத்தமானமாக இருக்க முயற்சிக்கின்றன. கொல்காத்தாவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மகாஜோத் சந்திப்புகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மம்தா மற்றும் கெஜ்ரிவால் இருவரும் நெருங்கிய உறவை பகிர்ந்து கொள்கிறார்கள், ஆனால் நீங்கள் கவனித்தால்?, இரு கட்சிகளும் காங்கிரஸை அழிப்பதன் மூலம் முன்னேற நினைக்கின்றன. 

காங்கிரஸ்

காங்கிரஸை அழிப்பது மட்டுமே அவர்களின் நோக்கம். அவர்கள் ஒரு போதும் பா.ஜ.க.வுக்கு எதிராக போராட விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியை பைத்தியம் என்று கூறியது கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நான் வெறுமனே பொதுமக்களின் உணர்வுகளை எதிரொலித்தேன் என்று ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் கொடுத்தார். ஆஹிர் ரஞ்சன் கூறுகையில், நான் வெறுமனே பொதுமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினேன். ஏற்கனவே ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதற்கு பொதுமக்கள் என்ன எதிர்வினையாற்றுகிறார்கள் என்று குரல் கொடுத்தேன் என்று தெரிவித்தார்.