சந்திரபாபு நாயுடு கைது- நடிகர் பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டம்

 
பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டம்

சந்திரபாபு நாயுடுவை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Image

ஆந்திர மாநில முதலமைச்சராக 2014-2019 ஆண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு   செயல்பட்டபோது கிராமப்புறங்களில் வேலை இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 317 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றப் புலனாய் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். வழக்கின் அடிப்படையில் நேற்று காலை 6 மணியளவில் ஆந்திரா மாநிலம் நந்தியலாவில் அவரை குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு கைது செய்ததை கண்டித்து  தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.

சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுமதி மறுப்பு: பவன் கல்யாண் சாலையில் படுத்து திடீர் போராட்டம்..!!

இந்நிலையில் ஊழல் வழக்கில் கைதான ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் நள்ளிரவில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சந்திரபாபு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரைப் பார்ப்பதற்காக விஜயவாடா சென்ற ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெலுங்கானா-ஆந்திரா எல்லையில் இரண்டு முறை தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.