ஹேப்பி லேண்ட் கேளிக்கை பூங்காவிலுள்ள ராட்டினம் முறிந்து விழுந்து விபத்து

 
ஹேப்பி லேண்ட் கேளிக்கை பூங்காவிலுள்ள ராட்டினம் முறிந்து விழுந்து விபத்து

கேரள மாநிலத்தில் உள்ள ஹேப்பி லேண்ட் கேளிக்கை பூங்காவிலுள்ள ராட்டினம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு விடுமுறை தினம் என்பதால் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் காலை முதலே வந்திருந்தனர். இந்த நிலையில் அங்கிருந்த 30 பேர் அமர்ந்து சுற்றக்கூடிய தூரியில் அனைவரும் அமர்ந்து சுற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென்று தூரி உடைந்து கீழே விழுந்தது. இதில் பலரும் இடிப்பாடுகளுக்குள் சிக்கி தவித்தனர். உடனடியாக அங்கிருந்த உறவினர்கள் மற்றும் பூங்கா நிர்வாகத்தினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தூரி உடைந்து விழுந்ததில் தமிழகம் நாகர்கோவிலை சேர்ந்த ஐந்து பேர் உட்பட பலர் காயமடைந்தனர்.