நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து கெஜ்ரிவால் அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி.. ராகவ் சதா குற்றச்சாட்டு

 
ராகவ் சதா

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து கெஜ்ரிவால் அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சதா குற்றம் சாட்டினார்.


டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசுக்கும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாக ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சியின் பிரபலமான மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அந்த கட்சியின் எம்.பி.யுமான ராகவ் சதா கூறியதாவது:  டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து கெஜ்ரிவால் அரசை கவிழ்க்க பா.ஜ.க. விரும்புகிறது. பா.ஜ.க. இப்போது  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் தங்கள் கட்சியில் சேருமாறு  ஆசை காட்டி மற்றும் மிரட்டி வருகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க பல ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜ.க. அணுகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணிஷ் சிசோடியா, சிறையில் உள்ள பயங்கரவாதியை விட மோசமாக நடத்தப்படுகிறார் என்று 
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்  குற்றம் சாட்டினார். கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.